கர்நாடகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கு தளர்வு - எடியூரப்பா சூசக தகவல்


கர்நாடகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கு தளர்வு - எடியூரப்பா சூசக தகவல்
x
தினத்தந்தி 16 May 2020 5:59 AM IST (Updated: 16 May 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 17-ந் தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கு தளர்வு இருக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா சூசகமாக கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. 

இந்த நிலையில் இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்த பொது ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட உள்ளதாக கூறினார். இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 17-ந் தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தும் என்று சூசகமாக கூறினார். இதுகுறித்து எடியுரப்பா கூறியதாவது:-

தடை நீடிக்கலாம்

17-ந் தேதிக்கு (நாளை) பிறகு ஊரடங்கை மத்திய அரசு தளர்த்த உள்ளது. அதுவரை காத்திருப்போம். எனக்கு இருக்கிற தகவல்படி, அனைத்து நிலையிலும் ஊரடங்கு தளர்த்தப்படும். 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட சில துறைகளுக்கு தடை நீடிக்கலாம். மற்ற அனைத்து விஷயங்களும் செயல்பட அனுமதி கிடைக்கும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story