பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 ஆக உயர்வு


பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 May 2020 8:06 AM IST (Updated: 16 May 2020 8:06 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137-ல் இருந்து 139 ஆக உயர்ந்துள்ளது.

குன்னம், 

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137-ல் இருந்து 139 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 137 பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் குன்னம் தாலுகா காடூர் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர், கீழப்பெரம்பலூரை சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் என 2 ஆண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 53 வயதுடைய நபர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொரு நபர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் சுகாதாரப்பணிகளையும், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137-ல் இருந்து 139 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 2 பேரும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

81 பேருக்கு சிகிச்சை

மேலும் மாவட்டத்தில் 12 கர்ப்பிணிகள் உள்பட 22 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பெரம்பலூருக்கு வந்த 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஏற்கனவே 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், மீதமுள்ள 81 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில், 20 பேர் குணமடைந்துள்ளதால், அவர்கள் இன்று (சனிக்கிழமை) வீடு திரும்ப உள்ளனர்.

Next Story