முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் வசூல் அதிகாரி தகவல்
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் வசூலாகி உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஊட்டி,
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நீலகிரி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் வசூலாகி உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தடுப்பு நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தோடர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கப்பட்டது.
ஊட்டியில் செயல்பட்டு வரும் சர்வதேச தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதிக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. குளிச்சோலை, நஞ்சநாடு, உல்லத்தி, எப்பநாடு, காரபிள்ளு, இத்தலார், அதிகரட்டி ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்து உள்ளனர். நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தனது ஒரு மாத சம்பளத்தில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.
ரூ.50 லட்சம் வசூல்
ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் சங்கங்கள், தனி நபர்கள், தனியார் அமைப்புகள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. 5 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், பால் பவுடர் அடங்கிய 310 தொகுப்புகள் ஊட்டிக்கும், 250 தொகுப்புகள் குன்னூருக்கும் என மொத்தம் 560 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொதுமக்களுக்கு எளிய முறையில் கடன் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வங்கி நிர்வாகிகள் தெரிவித் தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வசூலாகி உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story