சிவகாசியில் பெண்ணுக்கு கொரோனா தொற்று: உறவினர்கள் உள்பட 29 பேருக்கு மருத்துவ பரிசோதனை
சிவகாசியில் பெண்ணுக்கு கொரோனா தொற்று: உறவினர்கள் உள்பட 29 பேருக்கு மருத்துவ பரிசோதனை.
சிவகாசி,
சிவகாசியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள பெங்களூருவில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதையடுத்து அந்த பெண் வசித்து வந்த பகுதிக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தபகுதியில் வசித்து வரும் கொரோனா பாதித்த பெண்ணின் உறவினர்கள் உள்பட 29 பேருக்கு சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிவகாசி பகுதியில் இருக்கும் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு வரும் நபர்களால் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story