காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் திறப்பு - குடைகள் பிடித்தபடி மது பிரியர்கள் மது வாங்கிச்சென்றனர்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் திறப்பு - குடைகள் பிடித்தபடி மது பிரியர்கள் மது வாங்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 17 May 2020 4:00 AM IST (Updated: 17 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. வெயில் காரணமாக மது பிரியர்கள் குடைகள் பிடித்தபடி மது வாங்கிச்சென்றனர்.

காஞ்சீபுரம், 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது ஐகோர்ட்டு அனுமதியின் பேரில், தமிழக அரசு பாதுகாப்பு மண்டலங்களை தவிர்த்து மதுக்கடைகள் திறக்கலாம் என அறிவித்தது.

இதையொட்டி, கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத் தம் 15 டாஸ் மாக் கடைகள் திறக்கப்பட்டன.

காஞ்சீபுரம் பகுதிகளில் உள்ள டாஸ் மாக் கடைகளில் நேற்று அதிகாலை முதலே மது பிரியர்கள் டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் இடம் பிடித்து காத்திருந்தனர்.

மேலும் காலை 10 மணிக்கு மேல் நேரம் செல்ல செல்ல கோடை வெயிலை சமாளிக்கமுடியாமல் குடைகள் பிடித்தபடி 4 கி.மீட்டர் தூரம் வரை வரிசையில் சமூக இடைவெளிவிட்டு காத்திருந்தனர். ஒரு சிலர் முக கவசம் அணிந்திருந்தனர்.

சிலர் முகத்தை துணியால் மூடியபடி இருந்தனர். மதுக்கடைகளில் பாதுகாப்பிற்காக கட்டைகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந் தது. இடைவெளிவிட்டு நிற்பதற்காக வட்டம் போடப்பட்டிருந்தது.

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இடைவெளிவிட்டு நின்ற மது பிரியர்கள், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

Next Story