வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் திரும்பிய கர்ப்பிணி உள்பட 15 பேருக்கு கொரோனா அறிகுறி
வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் திரும்பிய கர்ப்பிணி உள்பட 15 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலத்தில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 4 முஸ்லிம் மத போதகர்கள், டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள், கர்ப்பிணிகள் என 35 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்றனர். இவர்கள் அனைவரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் மாறியது.
இதனிடையே வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் ஏராளமானோர் சேலம் திரும்பி வருகின்றனர். அவர்களை மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்து அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படு கிறது.
15 பேருக்கு அறிகுறி
இந்த நிலையில் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த சேலம், ஓமலூர், கருமலைக்கூடல், செந்தாரப்பட்டி, ஆத்தூர், நரசோதிபட்டி, வீராணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தந்தை-மகன் மற்றும் 7 மாத கர்ப்பிணி உள்பட மொத்தம் 15 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் கூறியதாவது:-
மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையிலேயே மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வருகிறோம். பின்னர் அவர்களுக்கு சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்படுகிறது. நேற்று மட்டும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 10 பேர் ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும் தனிமை வார்டில் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் இவர்கள் எங்கிருந்து சேலத்திற்கு வந்தார்களோ அந்த மாநில மற்றும் மாவட்ட கணக்கில் தான் கொரோனா தொற்று சேர்க்கப்படும். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து தனிமைப் படுத்தி வருகிறோம். அவர்களில் 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story