ராணிப்பேட்டை பகுதியில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மது விற்பனை - வரிசையில் நிற்பதற்கு பதிலாக செருப்பு, கைப்பை வைத்து இடம் பிடித்த வினோதம்
ராணிப்பேட்டை பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மது விற்பனை நடைபெற்றது. வரிசையில் நிற்பதற்கு பதிலாக செருப்பு, கைப்பையை வைத்து இடம் பிடித்த வினோதமும் நடைபெற்றது.
சிப்காட்(ராணிப்பேட்டை),
தமிழ்நாடு முழுவதும் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு ஆவலோடு காலையிலேயே மதுபானங்களை வாங்க டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையிலேயே நிற்க ஆரம்பித்தனர்.
ராணிப்பேட்டை பகுதியில்உள்ள சில இடங்களில் கடைகளின் முன்பு சமூக இடைவெளிக்காக வரையப்பட்டுள்ள வட்டங்களில் நின்று சமூக இடைவெளி கடைபிடித்து மதுபானம் வாங்கி சென்றனர். அம்மூர்- எடப்பாளையம் சாலையில் உள்ள கடை ஒன்றில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வட்டங்களில் நிற்காமல் மதுபான பிரியர்கள் மது வாங்கி சென்றனர்.
அதே சாலையில் உள்ள மற்றொரு மதுக்கடை முன்பு வெயிலுக்கு பயந்தும், வரிசையில் நிற்பதற்காக வரையப்பட்டிருந்த வட்டத்தில் நிற்பதற்கு பதில் தாங்கள் கொண்டு வந்த கைப்பை, செருப்பு, கற்கள் போன்றவற்றை வைத்து விட்டு அருகில் உள்ள மரங்களின் நிழலில் ஒதுங்கி நின்ற வினோதமும் நடைபெற்றது.
மதுபானம் வாங்க எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாததால் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் மதுவை வாங்கி செல்லலாம் என்பதாலும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் டோக்கன் பெற்று மதுவை வாங்கி செல்லலாம் என்பதாலும், நேற்று பிற்பகலுக்கு பின்னர் மது வாங்குவதற்கு கூட்டம் அதிகம் இல்லை.
Related Tags :
Next Story