மாவட்ட செய்திகள்

திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை + "||" + In Thiruvarur, sealing of 2 more tea shops in violation of the regulations - Tahsildar action

திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை

திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை
திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு தாசில்தால் சீல் வைத்தார்.
திருவாரூர், 

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை செய்து வருகிறது. இதில் வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள் உள்பட பல்வேறு தொழில்களை சார்ந்த கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

இதில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவகம், டீக்கடைகளில் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று தாசில்தார் நக்கீரன் தலைமையில் அலுவலர்கள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் சரிவர கடை உரிமையாளர்கள் கடைபிடிக்கின்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் திருவாரூர் புதிய ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் பேக்கிரியுடன் இணைந்த டீக்கடையில் மக்கள் டீ அருந்த அனுமதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து அரசின் விதிமுறைகளை மீறியதாக நேற்றுமுன்தினம் டீக்கடைக்கு சீல் வைத்தனர். இதனையடுத்து நேற்று நடந்த ஆய்வில் திருவாரூர் வாழவாய்க்கால் ரவுண்டானா பகுதியில் உள்ள 2 டீக்கடையில் மக்கள் டீ அருந்த அனுமதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அந்த 2 டீக்கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆனந்த்
திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பி.ஆர்.பாண்டியன், ரங்கநாதன், கிருஷ்ணமணி, சத்யநாராயணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொணடனர்.
3. திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு
திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார்.
4. திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைப்பு
திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
5. ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை