க.பரமத்தி ஒன்றியத்தில் 3,500 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
க.பரமத்தி ஒன்றியத்தில் 3,500 பேருக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார்.
க.பரமத்தி,
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊரடங்கில் வீடுகளில் முடங்கிய பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்களை வழங்கி வருகிறார். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடந்தூர், தென்னிலை தெற்கு, ராஜபுரம், தொக்குபட்டி, நஞ்சைகாளிக்குறிச்சி ஆகிய 5 ஊராட்சி பகுதிகளில் உள்ள 3,500 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
இதில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் தில்.செந்தில், கோடந்தூர் ஒன்றியக்குழு கவுன்சிலர் சுதாசேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன், கோடந்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் என்ற ஆனந்தராஜ், தென்னிலை கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகம், வங்கி இயக்குனர் ராஜா, இளைஞரணி வைஷ்ணவி பிரபு மற்றும் ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story