மாவட்ட செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது + "||" + Youth held for snatching gold chain near woman near Srimushnam

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் தங்க சங்கலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வல்லியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ராதிகா (36). இவர்களுக்கு அஜய் (7), சஞ்சய் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை ராதிகா தனது மகன் சஞ்சயுடன், காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பாக்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்த்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஸ்ரீமுஷ்ணம் சாய்பாபா கோவில் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராதிகாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த அருட்செல்வம் என்பவர், அந்த வாலிபரை துரத்தி சென்றார்.


வாலிபர் கைது

இதையடுத்து அந்த வாலிபர், தான் பறித்த தங்க சங்கிலியை அருகே வீசி விட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து அருட்செல்வம், இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீநெடுஞ்சேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோமலிங்கம் மகன் தமிழ்செல்வன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி; தம்பதி கைது
பண்ருட்டி அருகே விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
2. பண்ருட்டி அருகே பயங்கரம்: தந்தை அடித்துக் கொலை; கல்லூரி மாணவர் கைது
பண்ருட்டி அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. மணல் கடத்திய 3 பேர் கைது
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சாங்கியம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
4. சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை
சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த தாய், மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
5. நாமக்கல் அருகே நிலத்தரகர் கொலையில் 5 பேர் கைது
நாமக்கல் அருகே நிலத் தரகர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.