திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 2,891 பேர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 2,891 பேர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூர்,
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்தார்.
அனுப்பி வைக்கப்பட்டனர்
இந்த நிலையில் முதல்- அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் பெரியபாளையம் பகுதிகளில் தவித்து வந்த வடமாநில தொழிலாளர்களை சிறப்பு பஸ்கள் மூலம் திருவள்ளூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 2,891 பேர் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா, தாசில்தார்கள் சீனிவாசன், மணிகண்டன், விஜயகுமாரி, அரசு அலுவலர்கள், ரெயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story