பெண்ணாடத்தில் பெண், தூக்குப்போட்டு தற்கொலை


பெண்ணாடத்தில் பெண், தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 May 2020 7:03 AM IST (Updated: 18 May 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் குள்ளக்கருப்பு மகன் வேல்குமார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா க.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரி(வயது 26) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

ஆந்திராவில் வேலை பார்த்து வந்த வேல்குமார், கடந்த மாதம் வீட்டுக்கு வந்தார். அதை தொடர்ந்து மாதேஸ்வரிக்கும், வேல்குமாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாதேஸ்வரி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாதேஸ்வரியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story