கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு அமைச்சர் பேட்டி


கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 18 May 2020 11:09 AM IST (Updated: 18 May 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் வெளியூர் மாணவர்களுடன் ஒருவர் வர அனுமதிக்கப்படுவார். மாணவருடன் வருபவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும். அங்கு ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் படிக்கும் வெளியூரை சேர்ந்த மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.

மறுதேர்வு

இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைப்பது குறித்து இன்று (அதாவது நேற்று) முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

தேவைப்பட்டால் மறு தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story