வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2020 11:00 PM GMT (Updated: 18 May 2020 8:07 PM GMT)

வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், 

வேலுர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் வேலூர் கிளை சார்பில் வேலூர் மாவட்ட தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், சங்க மாநில உதவி செயலாளர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ‘அவுட்சோர்சிங்’ முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் வேலையை விட்டு நீக்கக் கூடாது, ஒப்பந்த ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், வேலுர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் வேலூர் கிளை, ஒய்வூதிய சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story