வருமானத்தை ஈட்டும் வகையில் வேறு தொழில் தொடங்க வழிவகை செய்ய வேண்டும் - அழகு கலை மகளிர் சங்கத்தினர் மனு
அரசு சார்பில் வேறு தொழில் தொடங்கவோ அல்லது வருமானத்தை ஈட்டும் வகையில் ஒரு வேலை வழங்கவோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி அழகு கலை மகளிர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட மகிழா அழகு கலை மகளிர் சங்கத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்கத்தினர் திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் அழகு நிலையம் திறக்க முடியாது என்பதை அறிவோம். எனவே எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
எங்களில் பலர் கடை வாடகை கொடுக்க முடியாமல் தொழிலை கைவிடும் சூழ்நிலையில் உள்ளனர். எங்களின் நிலை அறிந்து எங்களுக்கு அரசு சார்பில் வேறு தொழில் தொடங்கவோ அல்லது வருமானத்தை ஈட்டும் வகையில் ஏதாவது ஒரு வேலை வழங்கி எங்களையும், எங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story