கொரோனா தொற்று குறைந்ததால் மீஞ்சூரில் கடைகள் திறப்பு


கொரோனா தொற்று குறைந்ததால் மீஞ்சூரில் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 19 May 2020 4:00 AM IST (Updated: 19 May 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால் மீஞ்சூரில் கடைகள் திறக்கப்பட்டன.

மீஞ்சூர், 

மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை போன்றவற்றின் துரிதமான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனா தொற்று குறைந்து வந்தது.

இதையடுத்து மீஞ்சூர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சுகாதாரத்துறை, போலீசார், வருவாய்துறை, பேரூராட்சி அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி மீண்டும் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்தனர்.

குறைந்த அளவு பொதுமக்கள்

முக கவசம் அணிதல், சமூகஇடைவெளியுடன் பொருட் களை விற்பனை செய்தல், பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்க காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து விற்பனை செய்ய அனுமதித்தல் என்று நேற்று மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டன.

குறைந்த அளவிலான பொதுமக்கள் வந்து பொருட் களை வாங்கிச்சென்றனர்.

Next Story