மாவட்ட செய்திகள்

போதிய வியாபாரம் இல்லை என புகார்:காய்கறி, பழக்கடைகளை கூடலூர் நகருக்குள் மாற்ற அதிகாரிகள் ஆய்வு + "||" + Vegetable and fruit stalls Inspection of transfer officers within gudalur

போதிய வியாபாரம் இல்லை என புகார்:காய்கறி, பழக்கடைகளை கூடலூர் நகருக்குள் மாற்ற அதிகாரிகள் ஆய்வு

போதிய வியாபாரம் இல்லை என புகார்:காய்கறி, பழக்கடைகளை கூடலூர் நகருக்குள் மாற்ற அதிகாரிகள் ஆய்வு
போதிய வியாபாரம் இல்லை என வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி கூடலூர் நகருக்குள் காய்கறி, பழக்கடைகளை மாற்றுவதற்காக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கூடலூர்,

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மளிகை, காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றிருந்தனர். இதனால் அனைத்து ஊர்களிலும் காய்கறி, பழக்கடைகள் திறந்தவெளி மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

கூடலூரில் நகராட்சி மார்க்கெட் காந்தி திடலுக்கு மாற்றப்பட்டது. ஆனால் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து நகருக்குள் செயல்பட்டு வந்த காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் தனியார் பள்ளிக்கூட மைதானத்துக்கு மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை மையமாக செயல்பட்டு வருகிறது.

புகார்

இந்த நிலையில் பல தளர்வுகளுடன் 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 34 வகையான கடைகள் நகருக்குள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் செயல்படும் நேரம் இரவு 7 மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முக்கிய ஊர்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காய்கறி, பழக்கடைகள் கூடலூர் நகருக்குள் திறக்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை. தொடர்ந்து திறந்தவெளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. நகருக்குள் அனைத்து கடைகளும் திறந்து இருக்கின்ற சூழலில் காய்கறி, பழக்கடைகளை நகருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் வைத்திருப்பதால் போதிய வியாபாரம் இல்லாமல் அவதிப்படுவதாக ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை மைய வியாபாரிகள் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரிடம் புகார் செய்து வந்தனர். மேலும் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான காலசூழல் உருவாகி உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சேரும், சகதியுமாக மைதானம் மாறி விடுவதால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இதையொட்டி கூடலூர் நகருக்குள் காய்கறி, பழக்கடைகளை திறப்பது குறித்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பகல் 11 மணிக்கு கூடலூர் நகரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், மெயின் ரோடு, மைசூரூ மற்றும் ஊட்டி சாலைகள் உள்பட பல இடங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது பேன்சி கடைகள் சில திறந்து இருப்பதை கண்டு மூட உத்தரவிட்டனர்.

இதேபோல் நகராட்சி மார்க்கெட்டுக்குள் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சில கடைகள் திறந்து இருந்தது. இதில் அதிகாரிகளை கண்டதும் வியாபாரிகள் உடனடியாக தங்களது கடைகளை மூடினர். தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது போதிய சமூக இடைவெளி இல்லாததால் நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

கூடலூருக்குள் காய்கறி கடைகள்

இது குறித்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை மையத்தில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் கூடலூர் நகருக்குள் காய்கறி, பழக்கடைகள் தனித்தனியாக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி காய்கறி வியாபாரிகள் காந்தி திடல் மற்றும் உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகருக்குள் காய்கறி, பழக்கடைகள் செயல்படும் போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உடனடியாக கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட்
வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி.
2. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கலெக்டர் ஆய்வு பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்ற ஏற்பாடு
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை மாற்றுவதற்காக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
3. கோவையில் இருந்து விமானம் மூலம் 16 டன் காய்கறி, பூக்கள் சார்ஜாவுக்கு ஏற்றுமதி
கோவையில் இருந்து விமானம் மூலம் 16 டன் காய்கறி, பூக்கள் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
4. நெல்லையில் முழு ஊரடங்கு அறிவிப்பால் திரண்டனர் காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
நெல்லையில் முழு ஊரடங்கு அறிவிப்பால் காய்கறி, இறைச்சி கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
5. உளுந்தூர்பேட்டையில் காய்கறி சந்தை இடமாற்றம்
உளுந்தூர்பேட்டையில் காய்கறி சந்தை இடமாற்றம்.