கேரளா மாதிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட முடியாது - ஐகோர்ட்டில் மராட்டிய அரசு தகவல்
கேரளா மாதிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட முடியாது என்று மும்பை ஐகோர்ட்டில் மராட்டிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை,
நாக்பூரில் உள்ள மும்பை ஐகோர்ட்டு கிளையில் சுபாஷ் ஜன்வார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், “மராட்டியத்திலும், கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஒரே மாதிரியாக தான் இருந்தன. எனினும் அதன்பிறகு கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் மராட்டியத்தில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து ஐகோர்ட்டில் அரசு தெரிவித்த பதிலில், ‘‘மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ள வழிகாட்டுதல்கள் படி மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கேரளா, மராட்டியத்தின் சூழல்கள் வெவ்வேறு ஆனவை. எனவே அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த மேற்ெகாள்ளப்பட்ட நடவடிக்கைகளை மராட்டியத்தில் பின்பற்ற முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story