திருவாரூர் நகரில் உள்ள ஜவுளி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கலெக்டரிடம் மனு
திருவாரூர் நகரில் உள்ள ஜவுளி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் நகரில் உள்ள ஜவுளி கடைகளை திறக்க அனுமதி வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
திருவாரூரில்் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் மதிவாணன், தொகுதி செயலாளர்கள் மோகன், சங்கர், செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய, பெரிய ஜவுளி கடைகள் உள்ளன. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து ஜவுளி கடைகள் மூடப்பட்டன. கடந்த 10-ந்தேதி தமிழக அரசு, ஊரடங்கில் இருந்து பல்வேறு தொழில்களுக்கு தளர்வு அளித்துள்ளது. இதில் ஊரக பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள் ஏ.சி. வசதி இல்லாமல் திறக்க அனுமதி அளித்தது.
அனுமதி வேண்டும்
ஆனால் நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஜவுளி கடைகள் தொடர்ந்து மூடி கிடப்பதால் துணிகளும் பாழாகி வருகின்றது. இதனால் கடை உரிமையாளர் மட்டுமின்றி ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிமையாளர்கள், ஊழியர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story