ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம்; செல்லகுமார் எம்.பி. எச்சரிக்கை


ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம்; செல்லகுமார் எம்.பி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 May 2020 5:33 AM IST (Updated: 19 May 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீர் ஆதாரமாக பல ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த ராமநாயக்கன் ஏரியை செல்லகுமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார்.

ஓசூர்,

செல்லகுமார் எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் கொண்டு வர 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, குழாய்கள் பதிக்கப்பட்டு 24 மணி நேரம் மட்டுமே ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டது. பின்னர் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டதால், மக்கள் குடிநீருக்காக தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று கூறி வருகிறார்கள். திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவதற்கு முன்பே, மின்சாரத்திற்கு பணம் கட்ட வேண்டும் என்று தெரியாதா? மின் கட்டணம் செலுத்துவதில் அரசுக்கு சிக்கல் இருந்தால், அதனை காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் அமைப்பு செலுத்துவதற்கு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அப்போது, ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story