மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்டத்தில் ரூ.8¾ கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிக்காக ரூ.66 கோடியே 65 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
குத்தாலம்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிக்காக ரூ.66 கோடியே 65 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட பகுதியில் ரூ.8 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறையில் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் தூர்வாரும் பணியை விரைந்து முடிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவருடன் தஞ்சை கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி செயற்பொறியாளர் மரியசூசை, உதவி பொறியாளர்கள் முத்துமணி, வீரப்பன், சங்கர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
Related Tags :
Next Story