கூடலூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்
கூடலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று கம்பம்-குமுளி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால் வீடுகளில் உள்ள ஆண்கள் வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துச் சென்று மதுகுடிப்பதாகவும், வறுமையில் வாடும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்க கூடலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் அங்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கையை மனுவாக அளித்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story