ராசிபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் மின்சார திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ராசி புரத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராசிபுரம்,
ராசிபுரம் கோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் நாமக்கல் திட்ட தலைவர் இளங்கோவன், சி.ஐ.டி.யு. நாமக்கல் திட்ட தலைவர் (பொறுப்பு) முருகேசன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத் தலைவர் சிவக்குமார், கோட்ட செயலாளர் கவியரசன், துணை செயலாளர் ராமசாமி, ஐ.என்.டி.யு.சி. கோட்ட தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக நேற்று மதிய உணவு இடைவேளையின் போது பட்டணம், காக்காவேரி, முள்ளுக்குறிச்சி, அத்தனூர் உள்பட 16 பிரிவு அலுவகங்களின் முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story