விழுப்புரத்தில் மீன் கடைகள், காய்கறி கடைகளில் கலெக்டர் ஆய்வு


விழுப்புரத்தில் மீன் கடைகள், காய்கறி கடைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 May 2020 7:48 AM IST (Updated: 19 May 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மீன் கடைகள் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்,

மீன் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்று கலெக்டர் பார்வையிட்டார். அதோடு முக கவசம் அணிந்து வருபவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றுபவர்களுக்கும் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 அதனை தொடர்ந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இயங்கும் தற்காலிக காய்கறி கடைகளை பார்வையிட்ட கலெக்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் விலை பட்டியல் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே காய்கறிகளை விற்க வேண்டும் என்றும் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story