விவசாயிக்கு கத்திக்குத்து; கல்லூரி மாணவர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சந்திரன் (வயது 30).
மூங்கில்துறைப்பட்டு,
சந்திரன், சம்பவத்தன்று அதே பகுதி வழியாக டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு நின்ற கன்றுக் குட்டி மீது மோதுவது போல் ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ராஜா மனைவி சுசீலா(38), சந்திரனை தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுசீலா, அவரது மகன்கள் அஜித்(22), ரஞ்சித்(19), விஜய் மற்றும் உறவினர் வாசு(30) ஆகியோருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது ரஞ்சித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சந்திரனை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த சந்திரன், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விஜய், சுசீலா, வாசு, அஜித் உள்ளிட்ட 5 பேர் மீது வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரான ரஞ்சித்தை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள அஜித் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story