அரியலூரில் 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
346 பேர் வீடு திரும்பியுள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 353 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 329 பேரும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பெண்கள் உள்பட 14 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பெண்கள் என 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
2 பேருக்கு கொரோனா
ஆனால் நேற்று ஒரே நாளில் அரியலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களின் விவரம் வருமாறு:- அயன்தத்தனூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், பெரிய திருக்கோணத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர். இதில் 32 வயதுடைய நபர் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தவர். மற்றொருவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் 2 பேரும் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 353-ல் இருந்து 355 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 39 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story