மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 22-ந் தேதி 100 இடங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு + "||" + 22nd in Tirupur district Demonstration of wearing black emblem in 100 places

திருப்பூர் மாவட்டத்தில் 22-ந் தேதி 100 இடங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

திருப்பூர் மாவட்டத்தில் 22-ந் தேதி 100 இடங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு
திருப்பூர் மாவட்டத்தில் 22-ந் தேதி 100 இடங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர், 

திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. 

கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். உன்னிகிருஷ்ணன், ரங்கராஜ்(சி.ஐ.டி.யு.), 

ஜெகநாதன், செல்வராஜ்(ஏ.ஐ.டி.யு.சி.), ரங்கசாமி, சரவணன்(எல்.பி.எப்.), சிவசாமி(ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி(எச்.எம்.எஸ்.), சம்பத், 

மனோகரன்(எம்.எல்.எப்.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர் நல 

சட்டங்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் 

கையெழுத்திடக்கூடாது. பஞ்சப்படி ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.7 

ஆயிரத்து 500 வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கருப்பு சின்னம் அணிந்து...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வரை அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். 

நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை 

வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து வருகிற 22-ந் தேதி காலை 10 

மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தபால் நிலையம், தொழிலாளர் நல அலுவலகம்,தொழிற்சாலை 

ஆய்வாளர் அலுவலகம் ஆகிய அலுவலகம் முன்பு உள்பட திருப்பூர் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது 

என்று முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.
2. முழுகவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரம் திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்தனர்
முழு கவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரத்தை திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்து உள்ளனர்.
3. கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை
திருப்பூரில் பிரியாணி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.
4. திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது கட்டுமான பணிகள் தீவிரம்
திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
5. திருப்பூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது
திருப்பூரில் தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.