திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக தயாராகும் முககவசங்கள் முதற்கட்டமாக 81 ஆயிரம் ஆர்டர்கள் கிடைத்தது


திருப்பூரில்  மாற்றுத்திறனாளிகளுக்காக தயாராகும் முககவசங்கள்  முதற்கட்டமாக 81 ஆயிரம் ஆர்டர்கள் கிடைத்தது
x
தினத்தந்தி 20 May 2020 4:17 AM IST (Updated: 20 May 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக முககவசங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர், 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முழுவதும் முககவசம் அணிவது அதிகரித்தது. இதன் காரணமாக முககவச 

தேவையும் அதிகரித்தது. இதற்கிடையே முககவச ஏற்றுமதிக்கு இருந்த தடையும் தற்போது விலக்கப்பட்டுள்ளதால், 

ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருகிற முககவச ஆர்டர்களை பெற்று அதனை தயாரித்து 

அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நடிகர், நடிகைகளின் புகைப்படம் மற்றும் ஹாலிவுட் படங்களில் வருகிற 

கதாபாத்திரங்களின் உருவம், மீசை, தாடி இருப்பது போன்று என ஏராளமான புதிய வகையில் முககவசங்கள் திருப்பூரில் தயார் 

செய்யப்பட்டு வருகிறது.

இந்த முககவசங்களுக்கும் பலரிடம் வரவேற்பு இருந்து வருவதால், இதன் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே 

திருப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் தற்போது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக முககவசங்களை தயார் செய்து 

அசத்தியுள்ளது.

81 ஆயிரம் ஆர்டர்கள்

இது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான முககவச தயாரிப்பாளர் தண்டபாணி கூறியதாவது:-

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் முககவசங்களை அணிந்தால், அவர்கள் வாய் சைகை காட்டும் போது தற்போது 

அவர்களது வாய் வெளியே தெரியாது. அவர்கள் பேசுவதும் யாருக்கும் புரியாது. இதனால் இந்த வகை மாற்றுத்திறனாளிகளுக்காக 

காட்டன் துணிகளை பயன்படுத்தி முககவசம் தயார் செய்துள்ளோம்.

இந்த முககவசத்தின் மையப்பகுதி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாய்ப்பகுதி வெளியே தெரியும் வகையில், பாலிபுரொபலின் 

கவரை வைத்துள்ளோம்.

இதன் மூலம் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களது வாய் அசைவும் மற்றவர்களுக்கு நன்கு 

தெரியும். தற்போது இந்த முககவசம் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தமிழக அரசு சார்பில் முககவச 81 

ஆயிரம் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆர்டர்களின் படி பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த முககவசங்களை அனுப்பி 

வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story