11 எஸ்.ஆர்.ஏ. கட்டிடங்கள் தனிமை மையங்களாக மாற்றம்


11 எஸ்.ஆர்.ஏ. கட்டிடங்கள் தனிமை மையங்களாக மாற்றம்
x
தினத்தந்தி 20 May 2020 5:15 AM IST (Updated: 20 May 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 11 எஸ்.ஆர்.ஏ. கட்டிடங்கள் தனிமை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மும்பை, 

மும்பையில் ஆட்கொல்லி கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநகராட்சி உள்விளையாட்டு அரங்குகளில் தனிமை மையம், கொரோனா சிகிச்சை மையங்களை அமைத்து வருகிறது.

இந்தநிலையில் குடிசை சீரமைப்பு ஆணையம் (எஸ்.ஆர்.டி.) சுமார் 11 கட்டிடங்களை தனிமை மையங்களாக மாற்றி மும்பை மாநகராட்சியிடம் ஒப்படைத்து உள்ளது.

இதுகுறித்து குடிசை சீரமைப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் ஆணையம் கடந்த 20 நாட்களாக பல்வேறு கட்டுமான அதிபர்களுடன் இணைந்து எஸ்.ஆர்.ஏ. கட்டிடங்களை தனிமை மையங்களாக மாற்றும் பணியில் போர்கால அடிப்படையில் ஈடுபட்டது. தற்போது சுமார் 11 கட்டிடங்களில் 2 ஆயிரத்து 80 அறைகள் தனிமை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் மும்பை மேற்கு, கிழக்கு வார்டு பகுதிகளில் அமைந்து உள்ளன’’ என்றார்.

நேற்று முன்தினம் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் பி.கே.சி.யில் அமைத்த 1,000 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story