ஊரடங்கு தளர்வு எதிரொலி: கோவையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
ஊரடங்கு தளர்வு எதிரொலியாக கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
கோவை,
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதால் கோவையில் அனைத்து ரோடுகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காட்சி அளித்தன. அத்துடன் எவ்வித பரபரப்பும் இல்லாமல் சாலைகள் இருந்தன.
மேலும் கொரோனா ஊரடங்கின்போது கோவை மாநகர் பகுதியில் விதிகளை மீறி சுற்றி வந்தவர்களுக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு விதிகள் சற்று தளர்த்தப்பட்டது.
இதன் எதிரொலியாக, தற்போது வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று வழக்கமான நாட்களில் ஓடும் வாகனங்கள் அளவுக்கு போக்குவரத்து இருந்தது.
பயணிகள் போக்குவரத்து பஸ் தவிர அனைத்து வகையான வாகனங்களும் இயங்கின. ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, பெரியகடைவீதி உள்ளிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். கடைகள், அலுவலகங்கள் திறப்பு காரணமாக சற்று அதிகமாக மக்கள் வருகிறார்கள்.
இந்த நேரத்திலேயே ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கு கோவை திரும்பி வருவதை காட்டுகிறது.
Related Tags :
Next Story