திண்டிவனம் அருகே சிறுமி, இளம்பெண்ணை கடித்து குதறிய நரி


திண்டிவனம் அருகே சிறுமி, இளம்பெண்ணை கடித்து குதறிய நரி
x
தினத்தந்தி 20 May 2020 8:25 AM IST (Updated: 20 May 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே சிறுமி, இளம்பெண்ணை கடித்து குதறிய நரியை இளைஞர்கள் அடித்துக் கொன்றனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே நொளம்பூர் கிராமத்தில் காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் நரிகள் வசித்து வருகின்றன. இதில் ஒரு நரி, நொளம்பூருக்குள் புகுந்தது. அங்கு ஆனந்த் என்பவரின் கோழியையும், தினேஷ் என்பவரின் மாட்டையும் கடித்தது. மேலும் வீட்டில் துணி துவைத்துக்கொண்டிருந்த துலுக்காணம் மகள் காசியம்மாள்(வயது 24) என்பவரை கடித்து குதறியது. வலியால் துடித்த அவர் அலறினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அந்த நரியை துரத்தினர். இதில் மிரண்டுபோன நரி, முத்தரசன் என்பவரது வீட்டிற்குள் புகுந்தது.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரது மகள் மதுநிஷாவையும்(5) நரி கடித்து குதறியது. பின்னர் அந்த நரி, அங்கு திரண்டிருந்தவர்களையும் கடிக்க பாய்ந்தது. இதை பார்த்த இளைஞர்கள் உருட்டு கடைகளுடன் அந்த நரியை விரட்டி அடித்தனர். இதில் அந்த நரி செத்தது. இதையடுத்து காயமடைந்த சிறுமி மதுநிஷா, காளியம்மாள் ஆகிய இருவரும் சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒலக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story