கடற்கரையோர குடிசையில் தீப்பிடித்தது மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்
திருப்புல்லாணி அருகே கடற்கரையோர குடிசைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் மீன்பிடி வலைகள் எரிந்து நாசமானது.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே உள்ளது களிமண்குண்டு கிராமம். இந்த பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு வந்து வலைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக கடற்கரை பகுதியில் குடிசைகள் அமைத்துள்ளனர். இந்த குடிசைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 3 குடிசைகள் மளமளவென எரிந்தன. இதனை கண்ட பொதுமக்கள் திரண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த குடிசைகளுக்குள் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.
மீன்பிடி வலைகள்
நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்த குடிசைகளுக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீவிபத்தால் மீன்பிடி வலைகள் எரிந்துள்ளன. தற்போது அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story