கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: விசைத்தறிக்கூடங்கள்- சலூன்களில் கலெக்டர் சோதனை
ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிக்கூடங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல் கிராமப்புறங்களில் முடிதிருத்தும் கூடங்கள் (சலூன்கள்) இயங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மொடக்குறிச்சி,
திறக்கப்பட்டு உள்ள விசைத்தறிக்கூடங்கள், சலூன்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்று கலெக்டர் சி.கதிரவன் நேற்று சோதனை செய்தார்.
ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்துக்கு சென்றார். அங்கு துணி உற்பத்தியை பார்வையிட்ட அவர் விசைத்தறிக்கூட உரிமையாளரிடம் அதுபற்றி கேட்டு அறிந்தார். மேலும், விசைத்தறி ஓட்டும் பணியில் இருப்பவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அறிவிரை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அருகில் உள்ள சலூன் ஒன்றுக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த தொழிலாளி முகக்கவசம் அணியாமல் இருந்ததை பார்த்து அவருக்கு அறிவுரை வழங்கியதுடன், அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோல் பல்வேறு பகுதிகளிலும் கலெக்டர் சி.கதிரவன் சோதனை நடத்தினார்.
Related Tags :
Next Story