100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 12:32 PM IST (Updated: 20 May 2020 12:32 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த அந்த 10 பேரையும் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு எங்களுக்கும் வேலை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்த மேலவண்ணம் கிராமத்தில் 100 நாள் வேலையில் அக்கிராமத்தின் ஊராட்சி செயலாளர் ரமேஷ் 10 பேருக்கு மட்டும் வேலை கொடுத்து விட்டு மீதம் இருப்பவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மற்ற 100 நாள் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த அந்த 10 பேரையும் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு எங்களுக்கும் வேலை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story