பெங்களூருவை அதிர வைத்த பயங்கர சத்தம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் பீதி
பெங்களூருவில் நேற்று மதியம் திடீரென எழுந்த பயங்கர சத்தம் நகரையே அதிரவைத்தது. அதை கேட்ட மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பீதி அடைந்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு 2-வது நாளான நேற்று மதியம் சுமார் 1.25 மணி அளவுக்கு கே.ஆர்.புரம் உள்ளிட்ட பகுதியில் திடீரென பயங்கர சத்தம் எழுந்தது. இயல்புக்கு மாறான இந்த சத்தத்தை கேட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். எதனால் அந்த சத்தம் எழுந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பெங்களூருவில் 50 சதவீத பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சினர். நிலநடுக்கம் பதிவாகும் மையத்தில் இருக்கும் ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டதற்கான எந்த பதிவும் பதிவாகவில்லை. இந்த சத்தம் எதனால், ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
4 வினாடிகள் நீடித்த சத்தம்
கே.ஆர்.புரம் மட்டுமின்றி எச்.ஏ.எல்., பொம்மசந்திரா, அத்திப்பள்ளி, ஒயிட்பீல்டு, டின் பேக்டரி, இந்திராநகர், சர்ஜாப்புரா, ஆனேக்கல், ஹெப்பகோடி, கொட்டிகெரே, பன்னரகட்டா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த சத்தத்தை அந்த பகுதி மக்கள் உணர்ந்தனர். இந்த சத்தத்தின் அதிர்வு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதாவது அந்த கேமராவில் இருக்கும் ஒலியை பதிவு செய்யும் கருவியில் சத்தம் பதிவாகி இருக்கிறது. 4 வினாடிகள் அந்த சத்தம் நீடித்துள்ளது.
இந்த சத்தத்தை உணர்ந்த மக்கள் கூறும்போது, “இன்று (அதாவது நேற்று) மதியம் 1.25 மணியளவில் நாங்கள் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. இது இயல்பான சத்தத்தைவிட வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தோம். என்ன காரணத்திற்காக இந்த சத்தம் வந்தது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டது என்றனர்.
மக்கள் கருத்து
அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த பரத் என்பவர் கூறும்போது, “நான் காரில் அத்திப்பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அத்திப்பள்ளியை நெருங்கும்போது, ஒரு வித பயங்கரமான சத்தம் கேட்டது. உடனே நான் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தேன். சத்தம் ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதன் பிறகு நான் காரை ஓட்டி சென்றுவிட்டேன் என்றார்.
பெங்களூரு ஹெப்பகோடி பகுதியை சேர்ந்த பசவராஜ் கூறுகையில், “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சாப்பிடுவதற்காக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். அப்போது மதியம் 1.20 மணியில் இருந்து 1.30 மணிக்குள் ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை மூன்று முறை கேட்டேன். எனக்கு பயம் ஏற்பட்டது. இது நாம் எப்போதும் கேட்கும் இயல்பான சத்தம் கிடையாது” என்றார்.
நில நடுக்கமா?- பொதுமக்கள் பீதி
இதுகுறித்து போலீசார் கூறும்போது, “எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சுகோய் போர் விமானம் மேலே சென்றிருக்கும். அந்த விமானம் அதிக சத்தத்தை எழுப்பக்கூடியது. அந்த சத்தத்தை தான் மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்றனர்.
ஆனால் இதை எச்.ஏ.எல். நிறுவனம் மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்திற்கும், இந்த சத்தத்திற்கும் தொடர்பு இல்லை என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக கர்நாடக இயற்கை பேரிடர் நிர்வாக இயக்குனர் சீனிவாசரெட்டி, பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் எந்த ரிக்டர் அளவு கோலிலும் நில நடுக்கம் தொடர்பாக பதிவாகவில்லை. காற்றில் உள்ள வெப்பத்தின் காரணமாக இந்த சத்தம் எழுந்திருக்கலாம். ஆனாலும் இந்த சத்தம் எதனால் எழுந்தது என்பது பற்றி முழுமையான தகவல் எங்களிடம் இல்லை. இதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றார்.
மொத்தத்தில் பெங்களூருவை அதிரவைத்த இந்த பயங்கர சத்தத்தை கேட்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்குமோ என பெங்களூரு மக்கள் பீதி அடைந்தனர்.

Related Tags :
Next Story