பழவேற்காட்டில் கடல் சீற்றத்தால் சாலையில் புகுந்த கடல்நீர்


பழவேற்காட்டில் கடல் சீற்றத்தால் சாலையில் புகுந்த கடல்நீர்
x
தினத்தந்தி 21 May 2020 5:00 AM IST (Updated: 21 May 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

பழவேற்காட்டில் கடல் சீற்றத்தால் சாலையில் கடல்நீர் புகுந்தது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், வலைகள் அடித்து செல்லப்பட்டது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தது கோரைக்குப்பம் மீனவ கிராமம். இங்கு 150 வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கடற்கரை ஓரத்தில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். வலைகளையும் அங்கு வைத்திருந்தனர். யாரும் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கடந்த 55 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பழவேற்காடு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டது. வலைகளும் அலையில் இழுத்து செல்லப்பட்டன.

படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பழவேற்காடு- வடசென்னை அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் கடல்நீர் 2 அடி தூரத்திற்கு சென்றது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடல்நீர் சாலையில் புகுந்து பக்கிங்காம் கால்வாயை சென்றடைந்தது.

Next Story