மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி + "||" + Coronal Impact 2 killed, including ADMK Administrator

கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி

கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி
கொரோனா பாதிப்பால் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பூந்தமல்லி, 

சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த 47 வயதான அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு, வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். திடீரென்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ரத்த மாதிரி பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு நேற்று அதிகாலை அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அ.தி. மு.க. நிர்வாகி உயிரிழந்தார். கடந்த மாதம் இவருக்கு அம்மை நோய் ஏற்பட்டு உடல்நிலை சீராகி வந்த நிலையில் திடீரென்று அந்த பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இதனால் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியா னார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றால் இறந்தது உறுதியானது.

பலியான அந்த பெண்ணின் மூத்த சகோதரி நேற்று முன்தினம் வயிற்றுப்போக்கால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர் தலைமையில் சுகாதார துறையினர் ஆரணி பஜார் வீதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆரணி பஜார் வீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலி
சங்கராபுரத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் பலியானார்.
2. ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் பலி
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் பலியானார்.
3. முதியவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா ; 3 பேர் வீடு திரும்பினர்
புதுச்சேரியில் 2 முதியவர் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
4. கொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்
கொரோனாவால் வருமானம் பாதித்துள்ளது. இதனால் பணம் அனுப்பவுதில் ரூ.8.17 லட்சம் கோடி அளவுக்கு சரிவு ஏற்படும் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறி உள்ளார்.
5. கொரோனாவால் நிதிநெருக்கடி: விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டம்
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.