தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று
தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள் ளது.
மும்பை,
மும்பை தாராவி பகுதியில் கொேரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று தாராவியில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் தொடர்ந்து அதிக பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நேற்றும் அந்த பகுதியை சேர்ந்த 6 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இவர்கள் தவிர பாலிகா நகர், இந்திரா நகர், உத்தர் பாரதிய சொசைட்டி, ஆசாத் நகர், ராமசேது சால், கம்லா நேரு நகர், கிராஸ் ரோடு, 90 அடி சாலை, ராஜூவ்காந்தி நகர் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,378 ஆக உயர்ந்து உள்ளது.
உயிரிழப்பு இல்லை
சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக இங்கு ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தாராவியில் இதுவரை 56 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல நேற்று மாகிம் பகுதியில் 15 பேரும், தாதரில் 11 பேரும் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அந்த பகுதிகளில் முறையே 249, 187 ேபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story