மாவட்ட செய்திகள்

குடிமராமத்து திட்டத்தில் ரூ.86 லட்சத்தில் கண்மாய் தூர்வாரும் பணி + "||" + Rs.86 lakhs Dank tarn Inspiring work

குடிமராமத்து திட்டத்தில் ரூ.86 லட்சத்தில் கண்மாய் தூர்வாரும் பணி

குடிமராமத்து திட்டத்தில் ரூ.86 லட்சத்தில் கண்மாய் தூர்வாரும் பணி
போடி அருகே கண்மாயை தூர்வாரி, பராமரிக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
போடி,

போடி அருகே போ.அம்மாபட்டியில் மீனாட்சியம்மன் பெரியகண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை தூர்வாரி, பராமரிக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. பணிகளை பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர் மல்லிகா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த நிதியின் மூலம் இந்த கண்மாய் தூர்வாருதல், கரைகள் பலப்படுத்துதல், கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல், வரத்து வாய்க்காலில் மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், வரத்து மற்றும் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதுபோல், 18-ம் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் சுத்தகங்கை ஓடையில் அம்மாகுளம் அணைக்கட்டு முதல் இலுப்ப மரத்து அணைக்கட்டு வரையிலான மராமத்து பணிகளுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அணைக்கட்டில் வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டுதல், சுத்த கங்கை ஓடையை தூர்வாருதல் ஆகிய பணிகள் நடக்கின்றன. மேலும், ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகங்கை ஓடையில் வைரவகவுண்டன் அணைக்கட்டு முதல் டொம்புச்சேரி அணைக்கட்டு வரை தூர்வாருதல் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன.