மாவட்ட செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்த வாலிபர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை + "||" + young men drank poison to death Intensive care for the girlfriend

கொட்டாம்பட்டி அருகே திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்த வாலிபர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை

கொட்டாம்பட்டி அருகே திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்த வாலிபர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை
திருமணம் செய்து வைக்காததால் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது காதலிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொட்டாம்பட்டி,


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கீழ நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கவுதம் (வயது 22).

வஞ்சிபட்டியை சேர்ந்த சேகர் மகள் பவித்ரா(19). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோரிடம் கேட்டுள்ளனர். பின்னர் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் 2 ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்களுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லையாம்.

காதலன் சாவு

தங்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் பெற்றோர் காலதாமதம் செய்வதாக கூறி மனவருத்தம் அடைந்த காதல் ஜோடி விபரீதமாக தற்கொலை முடிவு எடுத்துள்ளனர்.

2 பேரும் நேற்று காலை அங்குள்ள கண்மாயில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். சிறிதுநேரத்தில் காதலன் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த பவித்ராவை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காதலன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.