கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லசிறப்பு பஸ்கள் இயக்கம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லசிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 21 May 2020 3:28 AM GMT (Updated: 2020-05-21T08:58:23+05:30)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் 50 சதவீத ஊழியர்களுடன், சமூக இடைவெளியை பின்பற்றி அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அரசு அதிகாரிகள், ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து செல்வதற்கு ஏதுவாக கள்ளக்குறிச்சியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலூர், விழுப்புரம், சங்கராபுரம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் முக கவசம் அணிந்தவாறும், சமூக இடைவெளியுடன் அமர்ந்தும் பயணம் செய்தனர்.

இதில் அரசு ஊழியர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி தாங்கள் வேலை பார்க்கும் அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பஸ்களை இயக்கும் போது டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் மற்றும் கையுறைகள் பயன்படுத்த வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் அரசு பணியாளர்கள் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பயணம் செய்ய வேண்டும். உள்ளூர் அரசு ஊழியர்களும் இந்த பேருந்தை தங்களது வழித்தடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

Next Story