மாவட்ட செய்திகள்

சிவகாசி அருகே பயங்கரம் முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை + "||" + Near Sivakasi Mechanic Murder

சிவகாசி அருகே பயங்கரம் முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை

சிவகாசி அருகே பயங்கரம் முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை
சிவகாசி அருகே முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள முனீஸ்நகர் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 53), மெக்கானிக். இவரது மனைவி கோவிந்தம்மாள் என்கிற சித்ராதேவி. இவர்களுக்கு முகிலா என்ற மகளும், மகாலிங்கம் என்ற மகனும் உள்ளனர். முகிலாவுக்கு வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆனது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிந்தம்மாள், மகாலிங்கம் இருவரும் வன்னியம்பட்டியில் உள்ள முகிலாவை பார்க்க சென்றுள்ளனர்.

வெட்டிக்கொலை

இதனால் அன்று இரவு நாராயணன் மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார். நேற்று காலையில் நாராயணன் வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும் பிணத்தை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இருந்து திரும்பிய 172 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்
டெல்லியில் இருந்து திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 172 பேர் சிவகாசி அருகே உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
2. சிவகாசியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சிவகாசியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்
சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4. சிவகாசி-எஸ்.என்.புரம் ரோடு ரெயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை
சிவகாசியில் இருந்து எஸ்.என்.புரம் செல்லும் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படும்போது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.