ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: குறுவை சாகுபடிக்காக விளைநிலங்களை சீரமைக்கும் விவசாயிகள்


ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: குறுவை சாகுபடிக்காக விளைநிலங்களை சீரமைக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 21 May 2020 10:50 AM IST (Updated: 21 May 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவதால், கரூர் பகுதியில் விளைநிலங்களை விவசாயிகள் சீரமைத்து வருகின்றனர்.

லாலாபேட்டை, 

மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவதால், கரூர் பகுதியில் விளைநிலங்களை விவசாயிகள் சீரமைத்து வருகின்றனர்.

மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நாமக்கல், கரூர் மாயனூர் வழியாக திருச்சி முக்கொம்புக்கு வரும். அதன்பிறகு முக்கொம்பு அணையில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

இதில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனூரில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக கிளை வாய்க்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

விவசாய பணிகள் தீவிரம்

இதனால் கரூர் திருக்காம்புலியூர், மகாதானபுரம், சிந்தலவாடி, பிள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் விளைநிலங்களை குறுவை சாகுபடி உழவு பணிக்காக தயார்படுத்தி வருகின்றனர்.

விளைநிலங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றியும், குப்பைகளை எடுத்தும், வரப்புகள் அமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story