மாவட்ட செய்திகள்

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா + "||" + Egmore maternity hospital employee Corona infection

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வரும் 45 வயது நபருக்கு கடந்த சில நாட்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். 

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.