காற்றுக்காக மாடியில் தூங்கியபோது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


காற்றுக்காக மாடியில் தூங்கியபோது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 May 2020 4:15 AM IST (Updated: 22 May 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

காற்றுக்காக மாடியில் தூங்கியபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

திருவொற்றியூர், 

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் மாடியில் சென்று தூங்கிவிட்டனர். நேற்று காலை எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.80 ஆயிரம், 3 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story