சோனியா காந்தி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்


சோனியா காந்தி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2020 2:25 AM IST (Updated: 22 May 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சித்தராமையா வலியுறுத்த்தி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா நிர்வாகி வழங்கிய தவறான புகாரின் பேரில் எங்கள் கட்சி தலைவி சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருதலைபட்சமாக செயல்பட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அரசியல் கட்டாயத்தின் பேரில் சோனியா காந்தியின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.

பிரதமர் கேர் நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தினார். முதல்-மந்திரி எடியூரப்பா, உடனடியாக தலையிட்டு சோனியா காந்தி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Next Story