மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் கல்லெறிந்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அடி உதை - 3 பேர் கைது + "||" + Stoned in the home Woman kicked and beaten - 3 arrested

வீட்டுக்குள் கல்லெறிந்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அடி உதை - 3 பேர் கைது

வீட்டுக்குள் கல்லெறிந்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அடி உதை - 3 பேர் கைது
திருவள்ளூரில் வீட்டுக் குள் கல்லெறிந்ததை தட்டிக்கேட்ட பெண்ணை அடித்து உதைத்தது தொடர்பாக தாய், மகன், மகள் கைது செய்யப் பட்டனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூர் கணபதி நகரை சேர்ந்தவர் பிரிதிவிராஜன். இவரது மனைவி சுஜாதா (வயது 46). நேற்று முன்தினம் சுஜாதா தன்னுடைய வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த மகேஷ் (25) ஒரு கல்லை எடுத்து அவரது வீட்டுக்குள் எறிந்து உள்ளார்.

இதை பார்த்த சுஜாதா தனது கணவருடன் சென்று மகேஷிடம், ஏன் வீட்டுக்குள் கல் எறிந்தீர்கள்? என தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ், அவரது தாயார் பார்வதி (48), மகேஷின் சகோதரி டில்லி ராணி (23) ஆகியோர் சுஜாதாவை தகாத வார்த்தையால் பேசி நடுரோட்டில் தள்ளி அடித்து உதைத்து மிரட்டி உள்ளனர். 

இது குறித்து சுஜாதா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகேஷ், பார்வதி, டில்லி ராணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.