கல்லூரிகளுக்கு புதிய விரிவுரையாளர், முதல்வர்கள் நியமனம் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
கல்லூரிகளுக்கு புதிய விரிவுரையாளர்கள் மற்றும் முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
உயர்கல்வித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பாடத்திட்டம், ஆன்லைன் பயிற்றுவித்தல், தேர்வு, விரிவுரையாளர்கள் பணி இடமாற்றம் குறித்து பட்டம் மற்றும் ஆசிரியர் தொகுதி மேல்-சபை உறுப்பினர்களுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அஸ்வத் நாராயண் பேசியதாவது:-
“கர்நாடகத்தில் கடந்த 3, 4 ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்படவில்லை. அதனால் விரிவுரையாளர்களை இந்த ஆண்டு பணி இடமாற்றம் செய்ய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இந்த பணி இடமாற்றம் குறித்து வழிகாட்டுதலை உருவாக்க அதை விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதை அனுப்பி அவர்களின் கருத்துகள் கேட்டு அறியப்படும். அனைவரின் கருத்துகளை கேட்டு, சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். புதிய விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். இது தொடர்பாக புதிய நியமனங்களை மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்படும்.
இந்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு புதிய விரிவுரையாளர்கள் மற்றும் முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கல்லூரி தேர்வு குறித்து ஜூன் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும். கல்லூரி தேர்வை எளிமையாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளத்தை பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு என்று தனி நிதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் சரியான முறையில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.”
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Tags :
Next Story