மாநகராட்சி பள்ளிகளில் சேர இணையவழியில் பதிவு செய்யலாம் தனி அதிகாரி தகவல்


மாநகராட்சி பள்ளிகளில் சேர இணையவழியில் பதிவு செய்யலாம்   தனி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 3:59 AM IST (Updated: 22 May 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி பள்ளிகளில் சேர இணையவழியில் பதிவு செய்யலாம் என்று தனி அதிகாரி கூறினார்.

கோவை,

கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர் நிலைப்பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப்பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள் மற்றும் காது கேளாதோர்க்கான ஒரு உயர்நிலைப்பள்ளி ஆக மொத்தம் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான 1 -ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெற்று வருகிறது. சிறந்த கட்டிட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, சிறப்பு பயிற்சிகள்(யோகா, கராத்தே முதலானவை) நன்கு பயிற்சி அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் மிகச் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புக்களை கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விவரங்களை இணைய வழியில் உள்ளடு செய்யலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story