மாவட்ட செய்திகள்

திருப்பூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது + "||" + in Tirupur Demanding money at gunpoint; One is arrested

திருப்பூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது

திருப்பூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது
திருப்பூரில் தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி, 


திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). தொழிலதிபரான இவர், ஹாலோ பிளாக் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கரைப்புதூர் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இடத்தை பணம் கொடுத்து வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இந்த இடத்திற்கும் உரிமை கோரி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சந்திரன் செரங்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சந்திரசேகர் (45) ஆகியோரிடம் சென்று, இந்த பிரச்சினையை முடித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும் சந்திரனிடம் ரூ.70 லட்சம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து முதற்கட்டமாக சந்திரன், ரூ.52 லட்சத்தை மணிகண்டன் மற்றும் சந்திரசேகரிடம் கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

கைது

அந்த பணத்தை கேட்டு நேற்று முன்தினம் பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சந்திரன் அலுவலகத்துக்கு மணிகண்டன் மற்றும் சந்திரசேகர் சென்றனர். அப்போது அலுவலகத்தில் இருந்த சந்திரனிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தனது உரிமம் பெற்று வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து பணத்தை கொடுக்குமாறு சந்திரனை, மிரட்டியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த சந்திரன் திருப்பூர் வீரபாண்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.
2. முழுகவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரம் திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்தனர்
முழு கவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரத்தை திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்து உள்ளனர்.
3. கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை
திருப்பூரில் பிரியாணி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.
4. திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது கட்டுமான பணிகள் தீவிரம்
திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
5. திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்
திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு சிறப்பு ரெயிலில் நேற்று 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.